நடிகை மாளவிகா மோகனன் யுத்ரா படக்குழுவினருடன் இணைந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
மலையாள திரையுலகில் துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான ‘பட்டம் போலே’ படத்தின் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இதன்பின் இவர் கன்னடம், ஹிந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்து வந்தார். இதையடுத்து நடிகை மாளவிகா மோகனன் கடந்த 2019-ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்து அசத்தினார்.
தற்போது நடிகை மாளவிகா மோகனன் தனுஷின் D43 படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் இவர் பாலிவுட்டில் யுத்ரா என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். வருகிற ஜூலை மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. அதற்கு முன் படக்குழுவினர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட படக்குழு திட்டமிட்டது . இந்நிலையில் இன்று நடிகை மாளவிகா மோகனன் யுத்ரா படக்குழுவினருடன் இணைந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.