ஆத்தூரில் இருந்து பயணிகள் இல்லாமலேயே சேலத்திற்கு ரயில் புறப்பட்டு வந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் 2வது அலை வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இதனால் பேருந்து போக்குவரத்து முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பயணிகளின் நலனுக்காக ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது.
இந்த நிலையில் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கையும் தற்போது வெகுவாக குறைந்துள்ளது. இதனால் ரெயில்வே நிர்வாகத்தினர் சிறப்பு ரயில்களும் குறிப்பிட்ட நாட்களுக்கு ரத்து செய்து வருகின்றனர். இந்த நிலையில் விருதாச்சலத்தில் இருந்து ஆத்தூர் வழியாக சேலத்திற்கு சிறப்பு ரயில் ஒன்று இயக்கப்படுகிறது.
அந்த ரயில் நேற்று காலை 7.30 மணிக்கு ஆத்தூர் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. ஆனால் அந்த ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் ஆத்தூர் ரயில் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் அந்த ரயில் பயணிகள் அற்ற நிலையிலேயே ஆத்தூரில் இருந்து சேலத்திற்கு புறப்பட்டு சென்றது.