தோனி இந்திய அணிக்கு தேர்வானது குறித்த , சுவாரசியமான தகவலை முன்னாள் வீரர் கிரண் மோரே பகிர்ந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் தலை சிறந்த கேப்டனாக திகழ்ந்தவர் மகேந்திர சிங் தோனி . இவர் தலைமையில் இந்திய அணி 2 உலகக் கோப்பைகளை கைப்பற்றியது. 2007ஆம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 2011ஆம் ஆண்டு நடந்த ஒருநாள் போட்டி உலக கோப்பையை இவரது தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது . அதோடு இந்திய டெஸ்ட் அணியை நம்பர் ஒன் இடத்திற்கு முன்னேற்றினார். கேப்டனாக மட்டுமல்லாது, விக்கெட் கீப்பிங்கிலும் தோனி சிறப்பாக செயல்பட்டார். இந்நிலையில் தோனி இந்திய அணிக்கு தேர்வானது குறித்து, இந்திய தேர்வு குழுவின் முன்னாள் சேர்மனான கிரண் மோரே , சுவாரசியமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்திய அணியில் ராகுல் டிராவிட்டுக்கு பதிலாக ,ஒரு விக்கெட் கீப்பரை தேர்ந்தெடுப்பதில் ஆர்வம் காட்டி வந்தோம்.குறிப்பாக 6, 7 வது இடத்தில் களமிறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த கூடியவராகவும், இருக்க வேண்டும் என்று கருதினோம்.
அப்போதுதான் தோனி உள்ளூர் போட்டிகளில், விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். அந்தப் போட்டியில் அணியின் ஸ்கோர் 170 ஆக இருந்தபோது, தோனி மட்டும் அதில் 130 ரன்களை அடித்து விளாசி இருந்தார். இதனால் தோனிக்கு அணியில் விக்கெட் கீப்பர் பணியை கொடுக்கவேண்டும், என்று கங்குலியிடம் நான் வலியுறுத்தினேன். ஆனால் அணியில் தீப்தாஸ் குப்தா விக்கெட் கீப்பிங்கில் இருந்ததால் , இதற்கு கங்குலி மறுப்பு தெரிவித்தார். இதனால் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன் .அதன் பின் கங்குலியை சமாதான படுத்துவதற்கு எனக்கு 10 நாட்கள் ஆனது. ஒருவழியாக கங்குலி இதற்கு ஒப்புக்கொண்டார் , இவ்வாறு கிரண் மோரே கூறினார்.கடந்த ஆண்டு சர்வதேச போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற தோனி , தற்போது ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அவரது தலைமையில் சிஎஸ்கே அணி 3 முறை ,ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.