Categories
தேசிய செய்திகள்

+2 பொதுத்தேர்வு ரத்து…. ம.பி முதல்வர் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவி வந்ததன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. மேலும் தேர்வுகளும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. ஒரு சில மாநிலங்களில் ஒன்று முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வெழுதாமலேயே ஆல்பாஸ் செய்யப்பட்டனர். ஆனால் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மட்டும் நடத்தப்படாமல் இருந்தது.

கொரோனா அதிகமாக பரவி வந்ததன் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக CBSE, CISCE பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, மத்திய பிரதேச மாநிலத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

Categories

Tech |