Categories
டெக்னாலஜி பல்சுவை

விவோவின் புதிய இசட்1எக்ஸ் ஸ்மார்ட்போன் … அடுத்த மாதத்தில் அதிரடி விற்பனை ..!!

விவோ  நிறுவனம்  தனது  புதிய இசட்1எக்ஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது  .

விவோ நிறுவனமானது தனது இசட் சீரிசில் புதிய ஸ்மார்ட்போனை  அறிமுகம் செய்ய உள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது .  இதற்குமுன்பு , விவோ நிறுவனம் ஜூலை மாதத்தில் விவோ இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்திருந்தது . இந்நிலையில்,  விவோ நிறுவனம் செப்டம்பர் மாத முதல் வாரத்தில் புதிய ஸ்மார்ட்போனை   அறிமுகம் செய்ய இருக்கும் நிலையில் ,

Related image

இந்த  புதிய ஸ்மார்ட்போனிற்கு  விவோ இசட்1எக்ஸ் என்ற பெயரிடப்பட்டுள்ளது . குறிப்பாக , இது சமீபத்தில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள  விவோ இசட்5 மாடலின் ரீ-பிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த விவோ இசட்1எக்ஸ் ஸ்மார்ட்போன் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் விவோ இசட்1 ப்ரோ மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. பிரைமரி கேமரா கொண்ட மூன்று பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்பட்டுள்ளது . மேலும் இதில் வழக்கம்போல் 32 எம்பி செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது .  இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 20,000 இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது . மேலும் இந்த  புதிய ஸ்மார்ட்போன் குறித்து எந்த தகவலும்  வெளிவரவில்லை .

Categories

Tech |