Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஜகமே தந்திரம்’ படத்துக்கும் ‘பேட்ட’ படத்துக்கும் தொடர்பு இருக்குதா?… விளக்கமளித்த கார்த்திக் சுப்புராஜ்…!!!

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஜகமே தந்திரம் படத்திற்கும் பேட்ட படத்திற்கும் தொடர்பு இல்லை என தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான பேட்ட திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படத்தை இயக்கி வந்தார். இந்த படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி, ஜோஜு ஜார்ஜ், ஜேம்ஸ் காஸ்மோ ,கலையரசன், சஞ்சனா நடராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். நேற்று இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் இந்த படம் வருகிற ஜூன் 18-ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸாக உள்ளது.

கார்த்திக் சுப்புராஜ்

இதனிடையே பேட்ட படத்திற்கும் ஜகமே தந்திரம் படத்திற்கும் தொடர்பு இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவி வந்தது. இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த கார்த்திக் சுப்புராஜிடம் ‘பேட்ட பட ரஜினியின் கெட்டப்பும் ஜகமே தந்திரம் பட தனுஷின் கெட்டப்பும் ஒரே மாதிரி இருப்பதால் இந்த இரு படங்களுக்கும் தொடர்பு இருக்கிறதா ?, பேட்ட பட வேலனின் மகன்தான் ஜகமே தந்திரம் பட சுருளியா? என கேட்டுள்ளனர் . இதற்கு கார்த்திக் சுப்பராஜ் ‘இல்லை பேட்ட படத்துக்கும் ஜகமே தந்திரம் படத்துக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. இது வேற கதை’ என விளக்கமளித்துள்ளார்.

Categories

Tech |