Categories
உலக செய்திகள்

இதுவரை காணாத கொடூரம்… காவல்துறையினரால் மீட்கப்பட்ட சடலம்… பொதுமக்கள் அச்சம்..!!

ஸ்பெயின் நாட்டில் வயதான பெண்மணி ஒருவரின் அழுகிய சடலம் வளர்ப்பு பூனைகள் பாதி தின்ற நிலையில் அதிகாரிகளால் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

மாட்ரிட் நகரில் வசித்து வந்த பெண்மணி ஒருவருடைய வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக காவல் துறையினருக்கு அக்கம்பக்கத்தினர் புகார் அளிக்கப்பட்டதையடுத்து திங்கட்கிழமை அவர்கள் விசாரணைக்காக வந்துள்ளனர். இந்நிலையில் கொலம்பியா நாட்டை சேர்ந்தவரும், கடந்த 1996-லிருந்து அந்த குடியிருப்பு பகுதியில் தனித்து வாழ்ந்து வந்தவருமான 79 வயது கிளாரா லென்ஸ் டோபோன் என்பவருடைய சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் வளர்த்து வந்த 7 பூனைகளில் ஐந்து பூனைகள் சேர்ந்து அவருடைய அழுகிய சடலத்தை பாதி தின்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அவர் மூன்று மாதங்களுக்கு முன்பு இறந்திருக்கலாம் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே அவருடைய இறப்பு கொரோனா காரணமாக ஏற்பட்டிருக்கலாமோ என்று பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். பொதுவாக அவர் பழங்கள் வாங்குவதற்காக அடிக்கடி உள்ளூர் சந்தையில் சென்று வருவார் எனவும், தினமும் அவர் தெரு நாய்களுக்கு உணவளித்து வந்ததாகவும் அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும் 5 பூனைகள் இறந்த நிலையிலும், அவருடைய குடியிருப்பில் குப்பைகள் குவிந்தும் காணப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டில் அந்தப் பெண்மணிக்கு உறவினர் எதுவும் இல்லை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Categories

Tech |