லண்டனில் உலகிலேயே முதன் முறையாக வெளிப்படையான மற்றும் மிதக்கும் நீச்சல் குளம் திறக்கப்பட்டுள்ளது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளிவந்து மக்களால் பெரிதும் கவரப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் கண்ணாடி போன்று நீச்சல் குளம் ஒன்று தென்மேற்கு பகுதியான நைன் எல்ம்ஸ் பகுதியில் இரு உயரமான கட்டிடங்களின் பத்தாவது தளங்களை சேர்த்து அந்தரத்தில் காற்றில் பறக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் “ஸ்கை பூக்” என்று கூறப்படும் இந்த நீச்சல் குளத்தில் கண்ணாடி போன்ற அமைப்புகள் பக்கவாட்டு பகுதிகள் அனைத்திலும் உள்ளது. இதன் மூலம் எளிதாக நீச்சல் குளத்திலிருந்து வெளியே உள்ளவர்களையும், வெளியிலிருந்து உள்ளே உள்ளவர்களையும் பார்க்க முடியும்.
https://www.instagram.com/_u/embassygardens/?utm_source=ig_embed&ig_rid=28b1d4a7-009f-4d35-be36-21e680deab0f&ig_mid=8C231BF8-958A-4CFD-94C3-DFD11156D42C
மேலும் இந்த நீச்சல் குளம் 82 அடி நீளம் உள்ளதால் 35 மீட்டர் தூரத்திற்கு நீந்தி செல்ல முடியுமாம். இதுபோன்ற ஒரு நீச்சல் குளம் உலகிலேயே இதுவே முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பா மற்றும் ரூப் டாப் பார் ஆகியவையும் இந்த நீச்சல் குளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 50 டன் எடை கொண்ட நீரை தாங்கும் திறன் பெற்றுள்ள இந்த நீச்சல் குளம் பாதுகாப்பான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த நீச்சல் குளம் எம்பஸி கார்டன் எனும் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், இதனை கட்டுமான பொறியாளர் ஏக்கரசலே ஓ காலஹன் என்பவர் உருவாக்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 1.48 லட்சம் லிட்டர் நீர் இந்த நீச்சல் குளத்தில் நிரப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எம்பஸி கார்டன் இந்த பறக்கும் நீச்சல்குளம் தொடர்பான வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இதனை பலரும் ரசித்து சமூக வலைதளங்களில் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் இங்கு வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்து லண்டன் வாசிகள் சிலர் ஸ்டேடஸ் வைத்து வருகின்றனர்.