Categories
மாநில செய்திகள்

“ஒரு மணி நேரம்” இளைஞர்களை குறிவைக்கும்…. ஆன்லைன் மோசடி கும்பல்…!!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மூலமாக பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மோசடியில் சிக்கி பலரும் தங்களுடைய பணத்தை பறிகொடுத்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஊரடங்கு சமயம் என்பதால் வீட்டிலேயே முடங்கி உள்ள இளைஞர்களை குறிவைத்து ஒரு மோசடி அரங்கேறியுள்ளது. சேவல் என்ற பெயரில் பெரிய நெட்வொர்க் ஆன் லைன் மோசடியில் ஈடுபடுவதாக அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது

இளைஞர்களின் செல்போன் எண்ணுக்கு அனுப்பப்படும் லிங்கை கிளிக் செய்தால் போதும் பெண்கள் ஆடை இல்லாமல் ஒரு மணி நேரம் வீடியோ கால் பேச ரூபாய் 700 என்று அந்த கும்பல் கூறியுள்ளது. இதை நம்பி பல தமிழக இளைஞர்கள் அதில் பணத்தை செலுத்தி ஏமாற்றம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |