நடிகர் சந்தானம் ஹிந்தி படத்தில் நடித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக கலக்கி வந்தவர் சந்தானம். இவர் பல டாப் ஹீரோக்களின் படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்து அசத்தியவர். கடந்த சில வருடங்களாக நடிகர் சந்தானம் ஹீரோவாக படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் பாரிஸ் ஜெயராஜ் திரைப்படம் வெளியாகியிருந்தது. தற்போது நடிகர் சந்தானம் டிக்கிலோனா, சபாபதி உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் சந்தானம் முதல் முறையாக ஹிந்தியில் சின்னு மன்னு என்ற படத்தில் நடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த படத்தில் சந்தானம் நடித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அபூர்வ சகோதரர்கள் படத்தில் கமல்ஹாசன் நடித்த அப்பு கெட்டப்பில் சந்தானம் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.