ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் , புதிய வரலாறு படைப்போம் என்று நியூசிலாந்து அணி ட்ரெண்ட் போல்ட் கூறியுள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டன் நகரில் நடைபெறுகிறது . இந்த போட்டி வருகின்ற 18ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் ,’இந்திய அணியை வீழ்த்தி புதிய வரலாறு படைக்க விரும்புகிறோம்’, என்று நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ட்ரெண்ட் போல்ட் கூறியுள்ளார் .
இதுகுறித்து அவர் கூறும்போது, “நியூசிலாந்து அணி தன்னுடைய சொந்த மண்ணிலும் ,உலகில் பல இடங்களுக்குச் சென்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றது. இதனால் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் புதிய வரலாறு படைக்கும் தகுதி எங்கள் அணிக்கு உள்ளது என்று நான் நம்புகிறேன். இந்த போட்டியில் பங்கேற்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதோடு மீதமுள்ள ஐபிஎல் போட்டியில் வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் மும்பை அணியில் விளையாடுவேன் “,என்று அவர் கூறினார்.