Categories
தேசிய செய்திகள்

குஜராத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து… கல்வித்துறை மந்திரி அறிவிப்பு…!!

குஜராத்தில் கொரோனா தொற்று காரணமாக பிளஸ் டூ பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள பல மாநிலங்களிலும் பிளஸ்டூ பொதுத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் குஜராத் மாநிலத்திலும் பொதுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி ஜூலை 1 முதல் 16ஆம் தேதி வரை இரண்டு பகுதிகளாக பொது தேர்வை நடத்த அரசு திட்டமிட்டிருந்தது. அதில் ஒரு பகுதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 வரையும், மற்றொரு பகுதி பிற்பகல் 2.30 மணி முதல் 5.45 மணி வரையும் நடைபெறும் என்று அறிவித்து இருந்தது.

இந்நிலையில் நேற்று சிபிஎஸ்இ பொதுத்தேர்வை ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்ததை அடுத்து குஜராத் முதலமைச்சர் கல்வி அமைச்சர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின் குஜராத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு ரத்து செய்வதாக அம்மாநில கல்வித்துறை மந்திரி அறிவித்துள்ளார்.

Categories

Tech |