Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு….! இடையூறு விலகி செல்லும்….! வெற்றி உண்டாகும்….!!

மீனம் ராசி அன்பர்களே.!

இன்று விலகிய சொந்தம் உங்களை பாராட்டக் கூடும். உங்களைப் பற்றி தவறான எண்ணம் கொண்டவர்களுக்கு நல்ல எண்ணங்கள் உருவாகும். வியாபாரத்தில் இடையூறு விலகி செல்லும். வியாபாரத்தில் உற்பத்தியும் விற்பனையும் சிறப்பாக இருக்கும். அதன் மூலம் கூடுதல் வருமானமும் கிடைக்கும். மாமன் மைத்துனன் வகையில் கண்டிப்பாக உங்களால் உதவிகள் வந்து சேரும். வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் கண்டிப்பாக நீங்கிவிடும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த சங்கடங்கள் குறைந்துவிடும். பிள்ளைகளுடைய கல்வி பற்றிய கவலைகள் நீங்கி விடும். பணவரவை கொண்ட அதற்கு ஏற்றார் போல் நீங்கள் செலவு செய்து கொள்வீர்கள். சிலருக்கு புத்தாடை, அணிகலன்கள் வாங்கும் வாய்ப்புகள் இருக்கின்றது.

காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடி விடும். காதலில் அவர்கள் எடுத்த முயற்சிகள்  வெற்றியை கொடுக்கும். அதே போல் பெண்களுக்கு ஏற்படும் மன வருத்தங்களும் சரியாகிவிடும். சாமர்த்தியமான பேச்சுகள் மூலம் காரியம் வெற்றி அடையும். வசீகரமான தோற்றமும் அழகான கண் பார்வையும் கொண்டவர்களாக இருப்பீர்கள். இன்று குடும்பத்தைப் பொறுத்தவரை கணவன் மனைவிக்கு இடையே சங்கடங்கள் தீர்ந்துவிடும். இன்று மாணவர்களுக்கு துணிச்சல் கூடும். கல்வி பற்றிய அக்கறை அதிகமாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது கருநீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். கருநீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்யுங்கள்  கண்டிப்பாக நல்லது நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                          அதிர்ஷ்டமான எண்:   6 மற்றும் 9                                                                                                                      அதிர்ஷ்டமான நிறம்: கருநீலம் மற்றும் இளம் மஞ்சள்

Categories

Tech |