தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மக்கள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் தென் சென்னையில் ரூபாய் 300 கோடியில் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும் மதுரையில் ரூ.60 கோடியில் உலகத் தரம் வாய்ந்த நூலகம் அமைக்கவும், ரூ. 24 கோடியில் 11 இடங்களில் 16,000 டன் நெல் சேமிப்பு கிடங்குகள் அமைக்கவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.