சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் மேல்தளத்தில் தமிழ் வாழ்க தமிழ் வளர்க என்ற பெயர் பலகை மீண்டும் இன்று வைக்கப்பட உள்ளது. சென்னை மாநகராட்சி கட்டிடத்தில் இருந்த தமிழ் வாழ்க தமிழ் வளர்க என்ற பெயர் பலகை நீக்கப்பட்டதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சர்ச்சை எழுந்தது. ரிப்பன் மாளிகை மறுசீரமைப்பு பணிகளின் போது அந்தப் பெயர் பலகை பழுதடைந்து கீழே விழும் நிலையில் இருந்ததால் அகற்றப்பட்ட தாக மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
இந்நிலையில் ரிப்பன் மாளிகை மறு சீரமைப்பு பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் தமிழ் வாழ்க தமிழ் வளர்க என்ற பெயர் பலகை இன்று மீண்டும் வைக்கப்பட உள்ளது. முன்னாள் முதலமைச்சர் கலைஞர் பிறந்த நாளன்று இந்த பலகை மக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி தமிழ் வாழ்க தமிழ் வளர்க பெயர் பலகை நிறுவப்பட்ட இன்று திறக்கப்பட உள்ளது.