இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்பதிவு செய்து வருகின்றனர். இதனை பயன்படுத்தி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள கோவின்ஹெல்ப் செயலி மூலம் முன்பதிவு செய்யலாம் என்ற இணைய முகவரியுடன் ஒரு எஸ்எம்எஸ் ஒன்று அனுப்பப்படுகிறது. இதன் மூலம் உங்கள் அக்கவுண்ட்டை ஹேக் செய்ய முடியும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இது அரசு அங்கீகரித்து இல்லை என்றும், இதனை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் எனவும் கூறியுள்ளனர்.