குத்தகை, வாடகை சட்டங்களில் திருத்தம் கொண்டு வரும் மாதிரி வாடகை சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. காலியாக இருக்கும் வீடுகளை எல்லாம் வாடகைக்கு விட இந்த மாதிரி வாடகை சட்டம் உதவும். வாடகை வீடுகளை வணிகமாக நடத்துவதில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை இந்த சட்டம் ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வாடகைக்கு வருபவர்கள் வீட்டில் நுழைவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக எழுத்து மூலமாகவோ அல்லது மின்னனு மூலமாகவோ நில உரிமையாளர்களின் நிபந்தனைகள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சட்டமானது வாடகை வீட்டில் பாதுகாப்பிற்காக முன்பணமாக செலுத்தப்படும் ரொக்கத்தொகை பணத்தில் மாற்றத்தை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.