தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் மே 31ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் பலனாக கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கணிசமாக குறைந்து வருகிறது. அதனால் ஜூன் 7 ஆம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாமல் முழு ஊரடங்கு நீட்டிக்க படுவதாக முதல்வர் அறிவித்தார். அதன்படி தளர்வுகள் இல்லா ஊரடங்கு தற்போது அமலில் உள்ளது.
இந்நிலையில் ஊரடங்கு காரணமாக கொரோனா பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், அதை முழுமையாக தளர்த்தினால் மீண்டும் நோய் பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளது என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அத்தியாவசிய பணிகளை மட்டும் முதலில் அனுமதிக்க வேண்டும். ஜூலை வரை பகுதி ஊரடங்கு அமல் படுத்தினால் மட்டுமே நோய் பரவலை முழுமையாக குறைத்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும் என்று குறிப்பிட்டுள்ளனர்.