தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து வீட்டிலேயே முடங்கி உள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்தாலும் மக்கள் மத்தியில் கொரோனா குறித்த அச்சம் நிலவி வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா குறித்த சந்தேகங்களை அறிந்து கொள்வதற்கு 104 மற்றும் 044-29510500 ஆகிய தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் மத்திய சுகாதார அமைச்சகம் 1075 என்ற எண்ணும் பாதுகாப்பு மற்றும் மீட்பு தேவைப்படும் குழந்தைகளுக்காக 1098 என்ற எண்ணும் முதியவர்களுக்காக 14567 என்ற எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.