தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து வீட்டிலேயே முடங்கி உள்ளனர். ஊரடங்கு பலனாக பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இருந்தாலும் ஒரு சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இன்னும் குறையவில்லை. அதிலும் குறிப்பாக கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. அதன் காரணமாக தமிழகம் முழுவதிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு பொதுமக்களுக்காக தற்போது ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் இந்த முகாம்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.