இந்தியாவில் 7 உட்பிரிவு ஜாதியினரை தேவேந்திரகுல வேளாளர் என அழைக்க வழிவகுக்கும் மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல் அளித்தது. அதன்படி குடும்பர், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளர், தேவேந்திர குலத்தார், வாதிரியார் ஆகிய ஏழு உட்பிரிவினர் தேவேந்திரகுல வேளாளர் என அழைக்கப்படுவர். பட்டியலில் மட்டுமே மாற்றம் செய்யப்படும். பட்டியலின சலுகைகள் தொடரும் என மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில் 6 ஜாதிப் பிரிவுகளை உள்ளடக்கிய தேவேந்திர குல வேளாளர் என்னும் பெயரில் ஜாதி சான்றிதழ் வழங்கலாம் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர் களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.