நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலும் பள்ளிகளில் 1 முதல் 11 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வை ரத்து செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து குஜராத், மத்திய பிரதேசம், உத்திரகாண்ட் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநில அரசுகள் மாநில கல்வி வாரியத்தின் கீழான பிளஸ் டூ பொதுத் தேர்வை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி தமிழகத்திலும் பிளஸ் டூ பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவது குறித்து மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்க ,2 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு முதல்வருடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.