ராணிப்பேட்டையில் விதியை மீறி கடைகள் திறக்கப்பட்டதால் அரசு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தமிழகத்தில் பரவி வரும் கொரோனாவை தடுப்பதற்கு அரசாங்கம் தற்போது முழு ஊரடங்கை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இதனை பொதுமக்கள் கடைபிடிக்கிறார்களா என்று காவல்துறையினரும், அரசு அதிகாரிகளும் தீவிரமாக அனைத்து பகுதிகளிலும் சோதனை செய்து வருகின்றனர்.
அதன்படி ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியில் தாசில்தார் மற்றும் வருவாய்த்துறையினர்கள் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விதியை மீறி திறக்கப்பட்ட கடைகளுக்கு அபராதம் விதித்துள்ளனர். மேலும் முக கவசத்தை அணியாத கடையின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர்.