நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் கொரோனா தடுப்பு பணியில் முக்கிய பங்காற்றும் சுகாதார பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் பலரும் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் கொரோனாவை எதிர்த்து போராடும் சுகாதார பணியாளர்கள் உயிரிழக்கும் பட்சத்தில் PMGKP திட்டத்தின் கீழ் இழப்பீடு கோரினால் காப்பீட்டுத்தொகை வழங்க தாமதமாக வருவதாக வந்த புகாரின் அடிப்படையில் நடைமுறைகளை ஒழுங்குப்படுத்தி எளிதாக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து சான்றளித்தால் 48 மணி நேரத்தில் காப்பீட்டுத் தொகை கிடைக்கும், புதிய நடைமுறையை சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் அறிவித்துள்ளது.