அமெரிக்க பத்திரிக்கையில் டெஸ்லா நிறுவனம் உணவகம் அமைப்பதற்கான பணியை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
அமெரிக்காவினுடைய பத்திரிக்கை நிறுவனம் வெளியிட்ட செய்திகுறிப்பாவது, டெஸ்லா நிறுவனத்தினுடைய தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் என்பவர் உணவக தொழிலில் தன்னுடைய ஆர்வத்தை செலுத்தியுள்ளார். இந்த வணிகம் டிரைவ்-இன் உணவகம் என்ற வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த உணவகம் டெஸ்லாவினுடைய சூப்பர் சார்ஜர் என்ற இடத்தில் அமைக்கப்படலாம் என தெரிகிறது. இந்த உணவகம் தொடங்குவதற்கான வேலைகளை டெஸ்லா நிறுவனம் தொடங்கிய நிலையில், இதற்கு டெஸ்லா T என்ற குறியீட்டைப் பயன்படுத்தவுள்ளதாக பத்திரிக்கை நிறுவனம் வெளியிட்டுள்ளது.