Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல..! முதியவருக்கு நேர்ந்த விபரீதம்… சிவகங்கையில் சோகம்..!!

சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டையில் குளிக்கச் சென்ற முதியவர் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சாக்கோட்டை போலீஸ் சரகம் ஆழமங்கலம் பகுதியில் வசித்து வந்த சுப்பன் ( 80 ) என்பவர் சாக்கோட்டை பகுதியிலேயே சில ஆண்டுகளாக வீட்டை விட்டு வெளியேறி தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள குளத்தில் நேற்று காலை குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துள்ளார். அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் இந்த சம்பவம் குறித்து சாக்கோட்டை காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |