தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக முழு ஊரடங்கை ஜூன் 7-ஆம் தேதி வரை அமல்படுத்தியுள்ளது. ஆனால் ரேஷன் கடைகள் பகுதி நேரம் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் ரேஷன் கடைகளை மூடாமல் கொரோனா பரவலை தடுக்க முடியாது என்று ரேஷன் கடை பணியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. ரேஷன் கடைகள் குறித்து புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவிக்க வேண்டும். மேலும் ரேஷன் கடை பணியாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும். கொரோனா பரவலை தடுக்க பத்து நாட்கள் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை விட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.