ஊரடங்கால் பொருளாதார ரீதியாக பின்தங்கி இருக்கும் கன்னட திரைப்பட தொழிலாளர்களுக்கு நடிகர்கள் யாஷ் பெரும் உதவி செய்துள்ளார்.
நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்றால் பலர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த சில நாட்களாக தொற்றின் தாக்கம் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொருளாதார ரீதியாக பின்னடைவில் இருக்கின்றனர். கேஜிஎஃப் படத்தின் மூலம் தேசிய அளவில் பிரபலமான நடிகர் யாஷ் கன்னட திரைப்பட தொழிலாளர்களின் தனிப்பட்ட கணக்குகளில் 5,000 ரூபாய் வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.
இதற்காக அவர் தனது சொந்த பணத்திலிருந்து ஒரு கோடி ரூபாய் செலவழிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பணம் அவர்களுக்கு தீர்வாகாது என்றாலும் ஒரு நம்பிக்கை தரும் வகையில் இருக்கும் என்று நடிகர் யாஷ் கூறியுள்ளார். அவரின் இச்செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.