Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அவங்களுக்கும் பாதுகாப்பு முக்கியம்… நடைபெற்ற சிறப்பு முகாம்… கலந்து கொண்ட வியாபாரிகள்…!!

காய்கறி மற்றும் பழ வியாபாரிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தமிழகத்தில் கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசு பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று காய்கறி மற்றும் பழ விற்பனைகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைப்படி பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஜானகிராம் பகுதியில் கொரோனா தடுப்பூசி போடும் முகமானது நடைபெற்றுள்ளது.  இதனை அடுத்து  ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஜோதி தலைமையிலான மருத்துவக் குழுவினர் இந்த முகாமில் கலந்துகொண்ட வியாபாரிகளுக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

Categories

Tech |