தற்போதைய நவீன உலகில் ஸ்மார்ட்போன் இல்லாதவர்களை பார்ப்பது மிகவும் கடினம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட்போன் உபயோகிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். விளையாட்டில் தொடங்கி வாழ்வின் முக்கிய அம்சங்கள் அனைத்தும் ஸ்மார்ட்போனில் அடங்கியுள்ளதால் அது மனிதர்களை அடிமைப்படுத்தி உள்ளது என்றும் கூறலாம். ஸ்மார்ட்போன் மூலம் பல நன்மைகள் நடந்தாலும் அதனால் தீமைகள் சிலவும் ஏற்படுகின்றது. அது நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.
இதுகுறித்து உளவியல் ஆலோசகர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் ஸ்மார்ட் போனில் இருந்து வெளியேறும் மின்காந்த அலைகளினால் அதனை அதிக நேரம் பயன்படுத்துபவர்களுக்கு பல பாதிப்புகள் ஏற்படுவதாக குறிப்பிட்டிருந்தார். அவை கவனம் சிதறல், உளவியல் பிரச்சனை, குறிக்கோளில் தவறுதல், வாழ்க்கை பற்றிய அக்கறையின்மை போன்றவை ஆகும். எனவே ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதை குறைத்து நமது வாழ்க்கையை நாம்தான் காப்பாற்றி கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
ஸ்மார்ட்போன் தொழில்நுட்பமானது ஒரு தலைசிறந்த தொழில் நுட்பம் முந்தைய காலகட்டம் போல் இல்லாமல் நம் வாழ்க்கையே முன்னேற்றி செல்வதற்கான பல படிப்புகள் பல விஷயங்களை பணம் கொடுக்காமல் இலவசமாக நாம் தெரிந்து கொள்வதற்கான ஒரு வசதி நம் கையில் இருக்கிறது இதை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறலாமே தவிர தேவையற்ற செயல்களில் கவனம் செலுத்தி ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகி நேரத்தை வீணாக்குவது நம் வாழ்க்கையை வீணாக்குவதற்கு சமம்