Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஓய்வெடுக்க நிறுத்திய போது… கூவம் ஆற்றில் சிக்கிய மாடு… தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

தீயணைப்பு வீரர்கள் கூவம் ஆற்றில் சிக்கிய மாட்டை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டுள்ளனர்.

சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொழிலாளி ஒருவர் தனது மாட்டு வண்டியில் செடி மற்றும் பூந்தொட்டிகளை விற்பனை செய்துள்ளார். இந்நிலையில் அந்த தொழிலாளி தனது மாட்டு வண்டியை சின்மயா நகர் பகுதியில் நிறுத்தியுள்ளார். அதன்பின் ஓய்வெடுப்பதற்காக தனது மாட்டை வண்டியில் இருந்து கழற்றி ஒரு ஓரமாக கட்டுவதற்கு முயற்சி செய்துள்ளார்.

அப்போது மாடு எதிர்பாராதவிதமாக அங்குள்ள கூவம் ஆற்றில் தவறி விழுந்து விட்டது. இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சேற்றில் சிக்கி இருந்த மாட்டை பத்திரமாக மீட்டுள்ளனர்.

Categories

Tech |