மின் கசிவினால் ஹோட்டல் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நங்கநல்லூர் பகுதியில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஹோட்டல் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அதிகாலை வேளையில் இவரது ஹோட்டலில் இருந்து கரும்புகை வெளிவந்ததை பார்த்தவர்கள் உடனடியாக ரவிச்சந்திரனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அறிந்ததும் ரவிச்சந்திரன் விரைந்து வந்து ஹோட்டல் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது அந்த அறையில் இருந்த இரண்டு குளிர்சாதன பெட்டிகளும் தீயில் எரிந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் சிறிது நேரத்திலேயே தீ மளமளவென ஹோட்டல் முழுவதும் பரவிவிட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 1/2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அங்கு பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் கிரைண்டர், குளிர்சாதனப் பெட்டிகள் உட்பட 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகிவிட்டது. இதுகுறித்து தீயணைப்பு துறையினர் கூறும்போது, உயர் மின்னழுத்தம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து பழவந்தாங்கல் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.