Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அவ்ளோ சொல்லியும் கேட்கல… மொத்தம் 100 பேர் மீது வழக்குபதிவு… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

ஊரடங்கின் விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக காவல்துறையினர் 100 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காவல்துறையினர், பொதுமக்கள் விதிமுறைகளை முறையாக பின்பற்றுகின்றனரா என்று கண்காணிப்பதற்காக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காவல்துறையினர் இ-பதிவு இல்லாமல் வரும் வாகனங்களை நிறுத்தி எச்சரித்து அனுப்புகின்றனர்.

இந்நிலையில் போக்குவரத்து காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் குமாரராஜா, ஏட்டுகள் சம்பத், சுரேஷ் மற்றும் நீலகண்டன் ஆகியோர் விழுப்புரம் நான்குமுனைை சந்திப்பு, பழைய பேருந்து நிலையம் அருகில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஊரடங்கின் விதிமுறைகளை மீறி  அத்தியாவசிய தேவை இன்றி சாலையில் செல்பவர்களின் வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து உள்ளனர். மேலும் ஊரடங்கின் விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக காவல்துறையினர் 100 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Categories

Tech |