Categories
மாநில செய்திகள்

ஜூன் -12 மேட்டூர் அணை திறப்பு…. முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

மேட்டூர் அணையின் பாசனத்தின் மூலமாக சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. வருடந்தோறும் ஜூன்-12 ஆம் தேதி முதல் ஜனவரி-28 ஆம் தேதி வரை காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்.

இந்நிலையில் காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.33 அடியாக உள்ள நிலையில் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து வரும் 12ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Categories

Tech |