கொரோனா தொற்று பரவலை எதிர்த்து போராட எதிர்காலத்தில் தடுப்பூசி டோஸ்களை வருடாந்திர அடிப்படையில் ஒதுக்க ஜெர்மனி உற்பத்தி நிறுவனங்களுக்கு கட்டணத்தை செலுத்த தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜெர்மனி கொரோனாவை எதிர்த்துப் போராட எதிர்காலத்திற்கு உதவும் வகையில் 600-700 மில்லியன் டோஸ்களை ஆண்டுக்கு இருப்பில் வைக்க திட்டமிட்டுள்ளதாகவும், தொற்றுநோய் ஆயத்த ஒப்பந்தங்கள் என்றழைக்கப்படும் டெண்டர் கோர எதிர்வரும் ஐந்து ஆண்டு காலத்திற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் ஜெர்மனி சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பஹன் கூறியுள்ளார். மேலும் ஜெர்மனியில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளின் வேகத்தினை விநியோகத்திற்கான ஐரோப்பிய ஒன்றிய ஒப்புதலை நம்பியிருப்பது மற்றும் உற்பத்தியில் தேய்வு ஆகியவை குறைத்துள்ளது என்றும், தடுப்பூசி தட்டுப்பாடு மீண்டும் ஏற்படாமல் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க ஜெர்மனி விரும்புவதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஜெர்மனி மட்டுமில்லாமல் பிரேசில், ஆஸ்திரேலியா, தாய்லாந்து, ஜப்பான் ஆகிய சில நாடுகள் உற்பத்தி கூட்டு ஒப்பந்தத்தை மருந்து தயாரிப்பாளரான ஆஸ்ட்ராசெனெகா PLC-யுடன் அமைத்து வருகின்றனர். அதேசமயம் தடுப்பூசி விநியோகத்தில் மறுபுறம் ஏற்றத்தாழ்வு நிலவுவதாக உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், பணக்கார நாடுகள் தடுப்பூசியினை ஏழை நாடுகளுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.