Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்…. அரசு திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், கடந்த வாரம் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் ஜூன் 5ஆம் தேதி வரை கொரோனா தடுப்பூசி போடப்படுவது நிறுத்தப்படுவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஜூன் மாதத்திற்கான முதல் தவணை டோஸ் 6 ஆம் தேதி தான் வரும். தற்போது இருப்பில் உள்ள தடுப்பூசிகளை மாவட்ட ஆட்சியர்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

Categories

Tech |