Categories
உலக செய்திகள்

மலேசிய வான் எல்லைக்குள் வரம்பு மீறி நுழைந்த சீன விமானங்கள்.. வெளியான தகவல்..!!

சீன விமானப்படைக்குரிய 16 விமானங்கள், மலேசியாவின் வான் எல்லைக்குள் வரம்பு மீறி நுழைந்துள்ளது. 

சீனா, தென் சீன கடலில் ஆதிக்கத்தை செலுத்தும் விதமான செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. எனவே சீன நாட்டிற்கும், சீன கடல் பகுதியை சுற்றி இருக்கும் நாடுகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு வருகிறது. அதன்படி தென் சீன கடல் பகுதியில் இருக்கும் மலேசியாவின் வான் எல்லைக்குள், கடந்த 31ம் தேதியன்று சீனாவின் விமானப்படைக்குரிய 16 விமானங்கள் விதியை மீறி நுழைந்திருக்கிறது.

இதனைத்தொடர்ந்து சீன விமானங்கள் சுற்றிக்கொண்டிருந்த பகுதிக்கு, மலேசிய விமானப்படை தங்கள் விமானங்களை அனுப்பி வைத்தது. எனினும் அதற்குள் அங்கிருந்து சீன விமானங்கள் சென்றுவிட்டது. இதுதொடர்பாக மலேசியா, சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம்  கண்டித்துள்ளது.

அதற்கு சீனா, எங்கள் நாட்டின் விமானங்கள் வேறு எந்த நாட்டின் எல்லைகளுக்கும் வரம்பு மீறி நுழையவில்லை. சர்வதேச சட்ட விதிகளின் அடிப்படையில், சர்வதேச வான் எல்லை பகுதியில் தான் சென்றது. இது வழக்கமாக நடைபெறும் பயிற்சி என்று கூறியிருக்கிறது.

Categories

Tech |