நாடு முழுவதிலும் கொரோனா அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் முழு ஊரடங்கு பெரும்பாலான மாநிலங்களில் அமலில் உள்ளது. அதன் ஒரு பகுதியாக கோவில்கள் அனைத்திலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதனால் பக்தர்கள் அனைவரும் எந்த கோவிலுக்கும் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில்திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு கடந்த மாதம் தொடங்கியது. அதன்படி ஜூன் மாதம் முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனையடுத்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இரவு 8 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தான அதிகாரி தெரிவித்துள்ளார். பக்தர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் கோவில் நடை இரவு 9 மணிக்கு ஏகாந்த சேவைக்குப் பின்னர் அடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சுவாமி தரிசனம் செய்ய காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை இலவச பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.