Categories
தேசிய செய்திகள்

ஆதார் கார்டு – பான் கார்டு எப்படி இணைப்பது?…. வாங்க பார்க்கலாம்…!!!

நாடு முழுவதும் உள்ள மக்கள் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டை இணைப்பதற்கான கால அவகாசம் மார்ச் 31 வரை வழங்கப்பட்டு இருந்தது. அவ்வாறு இணைக்காவிட்டால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால் அதற்கு மேலும் அவகாசம் வழங்க வேண்டும் என பல கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் அதற்கான அவகாசம் ஜூன் 30-ஆம் தேதி வரை மீண்டும் நீக்கப்படுவதாக மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது. வங்கி சேவைகளில் எவ்வித இடையூறும் ஏற்படாமல் இருக்க விரைவில் ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்க வேண்டும் என எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது. வருமான வரித்துறையின் புதிய இணையதளம் 7ஆம் தேதி தொடங்குவதால் அதில் ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்கலாம்.

ஆதார் கார்டுடன் பான் கார்டு எப்படி இணைப்பது என்பது பற்றி பார்க்கலாம் வாருங்கள்.

அதற்கு முதலில் income tax துறையின் incometaxindiaefiling.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் சென்று பார்க்கவும். அதில் இடது பக்கம் quick link என்பதில் link Aadhaar என்பதை கிளிக் செய்ய வேண்டும். ஒரு புதிய பக்கத்தில் click here என்ற ஹைபர்லின்க் செய்யப்பட்ட விருப்பம் கிடைக்கும் அதனை கிளிக் செய்ய வேண்டும். அதன்பிறகு புதிய பக்கத்தில் பான் கார்டு மற்றும் ஆதார் அட்டைக்கான இணைப்பு கேட்கும். அதில் தேவையான தகவல்களை உள்ளிட்டு உங்கள் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு இணைக்கப்பட்டுள்ளதா என்பதை நீங்களே தெரிந்துக்கொள்ளலாம்.

Categories

Tech |