Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘கே.ஜி.எப்’ நடிகர் யாஷின் அடுத்த பட இயக்குனர் இவரா?… வெளியான புதிய தகவல்…!!!

நடிகர் யாஷின் அடுத்த படத்தை இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கன்னட திரையுலகில் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான கே.ஜி.எப் படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் யாஷ். இந்த படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. வருகிற ஜூலை 16-ஆம் தேதி கே.ஜி.எப்-2 படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது .

Puri Jagannadh and KGF star Yash Multi-lingual film - tollywood

இந்நிலையில் நடிகர் யாஷின்  அடுத்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் பூரி ஜெகன்நாத் நடிகர் மகேஷ் பாபுவின் பிஸ்னஸ்மேன், போக்கிரி போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்தவர். தற்போது இவர் நடிகர் விஜய் தேவர்கொண்டாவின் லிகர் படத்தை இயக்கி வருகிறார். விரைவில் யாஷ்- பூரி ஜெகன்நாத் இணையும் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |