Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அங்க யாருமே இல்லை…. உலா வரும் காட்டு யானை… அச்சத்தில் தவிக்கும் பொதுமக்கள்…!!

காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்த சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் யானை, காட்டெருமை, கரடி, புலி போன்ற ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறன. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் கூடலூருக்கும், சுல்தான் பத்தேரி பகுதிக்கும் இடைப்பட்ட சாலையில் இருக்கும் தேவர்சோலை பஜாருக்குள் காட்டு யானை ஒன்று நுழைந்து விட்டது. இந்த யானை சாலையில் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்து கடைசியாக அங்குள்ள ஒரு தனியார் தோட்டத்திற்குள் புகுந்து விட்டது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும் போது, வனப்பகுதியில் ஏற்பட்ட கடும் வரட்சி காரணத்தால் காட்டு யானைகள் விவசாய பயிர்களை தேடி ஊருக்குள் நுழைகின்றன. மேலும் முழு ஊரடங்கு நேரத்தில் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுவதால் காட்டுயானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்வதாக தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |