Categories
உலக செய்திகள்

தண்ணீரில் தத்தளித்த குடும்பம்… 7 வயது சிறுவனின் போராட்டம்… குவியும் பாராட்டுகள்..!!

அமெரிக்காவில் எதிர்பாராதவிதமாக ஆற்றில் விழுந்த சகோதரி மற்றும் தந்தையை மீட்பதற்காக உதவி கிடைக்க ஏற்பாடு செய்வதற்காக ஒரு மணி நேரம் போராடி நீந்திச் சென்ற 7 வயது சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

புளோரிடா பகுதியை சேர்ந்த ஸ்டீவன் பவுஸ்ட் என்பவர் தமது 4 வயது மகள் அபிகால் மற்றும் 7 வயது மகன் சேஸ்-உடன் மீன் பிடிப்பதற்காக அங்கு உள்ள செயின்ட் ஜான்ஸ் நதிக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென ஏற்பட்ட தண்ணீரின் வேகம் மற்றும் சுழலால் அபிகால் அடித்து செல்லப்பட்டுள்ளார். இதையடுத்து ஸ்டீவன் சிறுமியை காப்பாற்றுவதற்காக படகிலிருந்து தண்ணீரில் குதித்துள்ளார். அதேசமயம் சிறுவன் சேஸ் கரையை நோக்கி நீந்தி சென்றுள்ளார்.

அந்த சிறுவன் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு கரையை சேர்ந்ததோடு அருகில் இருந்த குடியிருப்பில் தனது தந்தை மற்றும் சகோதரியை காப்பாற்றுவதற்காக உதவி கேட்டுள்ளார். இதையடுத்து மீட்புத்துறை மற்றும் தீயணைப்புத் துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நதியில் தத்தளித்துக் கொண்டிருந்த இருவரையும் காப்பாற்றியுள்ளனர். அதில் பாதுகாப்பு ஜாக்கெட் அணிந்திருந்ததால் அந்த சிறுமி மட்டும் தண்ணீரில் சுமார் 2 மணி நேரம் மிதந்தபடி உதவிக்காக காத்துக் கொண்டிருந்தார் என்று ஸ்டீவன் கூறியுள்ளார்.

Categories

Tech |