லண்டனில் பெண்ணிடமிருந்து பட்டப்பகலில் பையை திருடிக்கொண்டு தப்பி ஓடிய நபரின் துணிகர செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு லண்டனில் உள்ள நார்வுட்டு எனும் பகுதியில் உள்ள சாலையில் கையில் பையுடன் பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் அவர் அருகில் சென்றபடியே அவருடைய கையில் இருந்த பையை திருடி கொண்டு தப்பி ஓடியுள்ளார். அந்த நேரத்தில் அப்பெண் எதிர்பாராதவிதமாக தரையில் விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறையினர் நபர் ஒருவருடைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் அந்த நபருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் கூறியுள்ள காவல்துறையினர் இது குறித்து அந்த நபரிடம் பேச வேண்டும் என்றும் கூறியுள்ளனர். அந்த நபர் குறித்து யாருக்கேனும் தெரிய வந்தால் காவல்துறையினரிடம் தகவல் அளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.