மாணவர்களுக்கு சிறப்பாக கல்வி கற்பிப்பதற்காக தகுதியான ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும் விதமாகவும், ஆசிரியர்களின் தரத்தை உறுதிப்படுத்தும் விதமாகவும் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படுகின்றது. இதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசு பள்ளியில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள். தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது.
இந்நிலையில் பள்ளியில் ஆசிரியர் பணிக்கு நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வில்(டெட்) வெற்றி பெறுபவர்களுக்கு வழங்கப்படும் தகுதி சான்றிதழ் 7 ஆண்டுகளுக்கு பதிலாக ஆயுள் முழுவதும் நீட்டித்து மத்திய அமைச்சர் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். இது 2011ம் ஆண்டை கணக்கிட்டு அமலுக்கு வர இருப்பதாக தெரிவித்துள்ளார்.