Categories
அரசியல் மாநில செய்திகள்

தொகுதிக்கு 10,000…..நவ 14_க்குள் 30,00,000….. பாயும் உதயநிதி ஸ்டாலின்…!!

திமுக இளைஞரணி கூட்டத்தில் நவம்பர் 14_க்குள் 30 லட்சம் இளைஞர்களை உறுப்பினர்களாக நியமிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

திமுக இளைஞரணி மாவட்ட, மாநகர , மாநில அமைப்பாளர்கள் கூட்டம் சென்னை கிண்டி 100 அடி சாலையில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்று வருகிறது. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் இளைஞரணி  துணைச் செயலாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர். கலைஞரின் திருவுருவப்படத்திற்கு உதயநிதி ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Image

திமுக இளைஞரணி துணைச் செயலாளர்கள் முன்னிலையில் நடந்த இந்த கூட்டத்தில் திமுக முன்னாள் MLA S.M உசேன் , புதுச்சேரி முன்னாள் முதல்வர் ஜானகிராமன் , விக்கிரவாண்டி திமுக MLA ராதாமணி , நீட் தேர்வால் உயிர் நீத்த மாணவ மாணவிகள் , நீலகிரி மற்றும் கேரளாவில் கனமழை வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Image

பின்னர் தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பு தமிழருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தேசிய கல்வி கொள்கை வரையறையை திரும்பப் பெற வேண்டும் என கூட்டத்தில் 12 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மேலும் மார்ச் 1_ஆம் தேதி இளைஞர் எழுச்சி நாளை சிறப்பாக கொண்டாட வேண்டுமென்றும் , அதற்கு  மாவட்ட மாநில அளவில் விளையாட்டுப் போட்டிகளை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.செப்டம்பர் 14ம் தேதி முதல் நவம்பர் 14ம் தேதிக்குள் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 10,000 இளைஞருக்கு குறையாமல் ஒட்டு மொத்தமாக 30 லட்சம் இளைஞர்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் எனவும்  நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Categories

Tech |