தமிழகத்தில் கொரோனா அதிகம் பதித்த மாவட்டங்களின் வரிசையில் நாமக்கல் மாவட்டம் 8வது இடத்தை பிடித்துள்ளது.
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கொரோனாவின் தாக்கம் கடந்த சில வாரங்களாக சற்று குறைந்து வந்த நிலையில் சில மாவட்டங்களில் மட்டும் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் அதிகம் பதித்த மாவட்டங்களின் வரிசையில் நாமக்கல் மாவட்டம் 8வது இடத்தை பிடித்துள்ளது. நாமக்கல் சிறிய மாவட்டமாக இருந்தாலும் அங்கு ஒருநாள் தொற்று பாதிப்பு 900-ஐ கடந்துள்ளது.
இதனால் மாவட்ட பொது மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து கொரோனாவை தடுக்க தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் மிகவும் அத்தியாவசியமான தேவைகளுக்கு மட்டுமே வெளியே செல்ல வேண்டும் எனவும் 18 வயது மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்ட வேண்டும் எனவும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.