தமிழகத்தில் கொரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்தார். இதையடுத்து முதல் தவணை வழங்கப்பட்டு தற்போது இரண்டாம் தவணையும் வழங்க இருக்கிறது. இந்நிலையில் திருநங்கைகளுக்கும் நிவாரண நிதியாக ரூபாய் 2000 வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மொத்தம் 11,449 திருநங்கைகளில் 2,956 பேர் ரேஷன் அட்டைதாரர்களாக உள்ளனர். மற்றவர்களுக்கு கொரோனா நிதி ரூபாய் 2000 வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. திருநங்கைகளுக்கு பேருந்தில் கட்டணமில்லா பயணச் சலுகை அளிக்கப்பட்ட நிலையில் கொரோனா நிவாரணமும் அறிவிக்கப்பட்டுள்ளது திருநங்கைகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.