நடிகை சங்கீதா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது ரசிகர்களுடன் உரையாடியுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் நடிப்பில் வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் அப்டேட்டுக்காக அஜித் ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கின்றனர் . இந்நிலையில் வலிமை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை சங்கீதா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது ரசிகர்களுடன் உரையாடியுள்ளார் .
அப்போது பேசிய அவர், வலிமை படத்தில் அஜித் இதுவரை நடித்திராத ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்றும் 10, 15 வயது பின்னோக்கி சென்றது போல் மிக அழகான தோற்றத்தில் அஜித் இருப்பார் என்றும் கூறியுள்ளார். தற்போது நடிகை சங்கீதா கூறிய இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.