பிரிட்டன் இளவரசி கேட்மிடில்டன், தன் நண்பர்களிடம், ஹரி-மேகன் தொடர்புடைய பிரச்சனைகளை தன்னால் எளிதில் தீர்க்க முடியும் என்று கூறியதாக தெரியவந்துள்ளது.
பிரிட்டன் ராஜ குடும்பத்திலிருந்து இளவரசர் ஹரி மற்றும் அவரின் மனைவி மேகன் இருவரும் வெளியேறி அமெரிக்காவில் வசிக்கிறார்கள். அப்போதிலிருந்தே இருவரும் அரச குடும்பத்தின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் ஹரி, தன் தாய்க்கு நேர்ந்த கொடுமை தனக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற அச்சத்தில் இருந்ததாக கூறியிருந்தார்.
மேலும் பிரிட்டன் மக்கள் இளவரசர் சார்லசை அதிகம் விரும்பமாட்டார்கள். ஹரியும், தன் தந்தை சார்லஸ் குறித்து பல குற்றச்சாட்டுகளை கூறினார். அதாவது தாய் டயானா காலமான பின்பு தங்களை பொறுப்புடன் வளர்க்கவில்லை. தங்களின் வலி மற்றும் வேதனைகளை அதிகமாக்கியதால் தான், போதைக்கு அடிமையாகும் நிலை ஏற்பட்டதாக மனமுடைந்து கூறியிருந்தார்.
மேலும் இளவரசி டயானாவின் உருவச்சிலை திறக்கும் நிகழ்வில் இளவரசர் ஹரி பங்கேற்க முடியாத நிலை ஏற்படும் என்று கூறப்பட்டு வந்தது. இதற்கிடையில் கேட் மிடில்டன், ஹரி-மேகன் தொடர்புடைய அனைத்து பிரச்சினைகளும் தன்னால் எளிதாக தீர்த்து வைக்க முடியும் என்றும் அதற்கு தாமதம் ஏற்பட்டு விட்டதாக தான் நினைக்கவில்லை என்றும் தன் நண்பர்களிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது இளவரசர் பிலிப் மரணமடைந்த பின்பு அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்ற இளவரசர் ஹரி, மகாராணியார், தந்தை சார்லஸ் மற்றும் சகோதரர் வில்லியமுடன் தனியாக பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தன் நண்பர்களிடம் ஹரி தொடர்பில் நம்பிக்கை வைத்திருப்பதாக கேட் கூறியது தெரியவந்துள்ளது.