Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கார்பைடு கல் மூலம் பழுக்க வைத்த… மாம்பழங்களை சாப்பிடுவதால்… புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது…!!

ராமநாதபுரத்தில் கார்பைடு கல் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்களை விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முக்கனிகளில் ஒன்றான மாம்பழ சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இயற்கையாக எத்திலின் மூலம் பழுக்ககூடிய மாம்பழத்தை பல வியாபாரிகள் வியாபார நோக்கில் கார்பைடு கல் மூலம் பழுக்க வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுபோன்ற கார்பைடு கல் வைத்து பழுக்க வைத்த மாம்பழங்களின் விற்பனை அதிகளவில் நடைபெறுகின்றது. இந்த மாம்பழங்கள் பொது மக்களை கவர்ந்து இழுக்கும் வகையில் அதிக மஞ்சள் நிறத்துடனும், நன்கு பழுத்த பழம் போல காட்சியளிப்பதால் உடனடியாக பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர்.

இதனை தொடர்ந்து செயற்கையாக பழுக்க வைக்கும் மாம்பழங்களை சாப்பிடுவதனால் உடலுக்கு பலவகையான தீங்குகளை விளைவிக்கிறது. இதுகுறித்து மருத்துவர்கள் கூறும் போது இத்தகைய மாம்பழங்களினால் உயர் இரத்த அழுத்தம், வயிற்றுப்போக்கு, வயிற்றில் புண், வாந்தி, மயக்கம் மற்றும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இத்தகைய மாம்பழங்களை அரசு தடை விதித்த போதிலும் அந்த தடையை மீறி பலரும் விற்பனை செய்து வருகின்றனர். அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரடங்கு காலத்தில் வியாபாரிகள் கார்பைடு கல் மூலம் பழுக்க வைத்த  மாம்பழங்களை விற்பனை செய்து வருகின்றனர். இதனை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |